Tuesday, November 12, 2013
பன்னிகுட்டி ராமசாமி in ஆரம்பம்
இடம்: சத்யம் சினிமாஸ், ஆரம்பம் படம் பாக்க நம்ம அகில உலக தலைவர் ஆல் இன் ஆல் அழகுராஜா: பன்னிகுட்டி ராமசாமி,,, டிப்பன் பாக்ஸ் தலையன் செந்தில் மற்றும் மிசஸ் ராமசாமி
பன்னிகுட்டி ராமசாமி: டேய், என்னடா இவளோ கும்பல் இருக்கு, டிக்கெட் கெடைக்குமா?
செந்தில்: லம்பா கெடைக்கும்னே வாங்க
ப. ரா: *இவன் வேற பொடி வச்சு பேசி கடுப்பேத்துறான், எவனையாவது கேப்போம் படம் எப்படின்னு*…. ஏம்பா தம்பி படம் எப்புடி?
ரசிகர்1: அண்ணேன் "தல தாறுமாறு"'
ப. ரா: தம்பி கத நல்ல கதையா நாங்க ஒரு குடும்பமா வந்துருக்கோம்?
ரசிகர்2: அண்ணேன் "தல மரண மாஸ்"
ப. ரா: டேய் படம் எப்புடிடா இருக்கு?
ரசிகர்3: அண்ணேன் "தல தெறிக்க விட்டுருக்காரு"
ப. ரா: *grrrr*அட நம்ம பிரேம்ஜி, தம்பி எப்புடி இருக்க, வீட்டுல எல்லாம் சௌக்கியமா? உங்க அண்ணன் அதான் சேட்டு வீட்டு கல்யாணத்துக்கு போன மாதிரியே படம் எடுப்பானே…'பிரியாணி' நல்ல க்கிண்டுரானா?
அத விடு...ஆரம்பம் படம் பாக்கலாமா?
பிரேம்ஜி: என்ன அப்புடி கேட்டுடீங்க. தல ROCKING.DOT
ப. ரா: *பிரேம்ஜி முடிய புடிச்சி இழுத்து* டேய் என்ன நக்கலா?, ஏன்டா படம் எப்புடின்னு கேட்டா, ஒருத்தன் மாஸ்ங்குரான், ஒருத்தன் தாறுமாறுகுரான்" ஓடிடுங்கடா.
1000 குடுத்து டிக்கெட் வாங்கிட்டு ஒரு நாயிக்கும் கத தெரியல.. ச்சே...மேயிற மாட நக்குற மாடு கெடுத்த மாதிரி சும்மா வீட்டுல ஒக்காந்திருந்த என்ன இந்த ஆப்ரிக்கா பண்ணி சொரிஞ்சு விட்டுடுச்சு…அந்த RJ பாலாஜி தம்பியும் பஞ்சு மிட்டாய் தலையனும் இருந்தாலாவது 120 காசு குடுத்து 10000 parkingukku கட்டி நமக்கு சொல்லுவானுங்க...ஆவிங்கலயும் ஆப் பண்ணிட்டாயிங்க
செந்தில்: அட விடுங்கண்ணே …கவலை படாதீங்க பக்கத்துக்கு தியெடர்ல ராஜா ராணி நு ஒரு படம் போட்ருக்காங்க…கும்பல் இல்ல அதுக்கு போலாம்னே
ப. ரா: எது அந்த இட்லினு ஒர்த்தன் எடுத்தானே அதுவா?
செந்தில் :ப்ப்பூபூ அண்ணே அது இட்லி இல்லைனே அட்லி
ப. ரா: கொஞ்சம் பக்கத்துல வா
செந்தில்: நோ மெடிசின் (செந்தில்…கௌண்டர் பக்கத்தில் போக)
ப. ரா: த்தூ...ஆமா இவுரு பெரிய ஜேம்ஸ் வசந்தன்....இங்க 'ஒரு வாரத்தை ஒரு லட்சம் போட்டி' நடக்குது...நான் ஒரு வார்த்த தப்பா சொல்லிட்டா ...ஒரு லட்சம் என்ன விட்டு போய்டும்…படுவா
டேய், நீ மௌன ராகம் & அலைபாயுதே படம் பாத்ருக்கியா?
செந்தில்: என்னனே இப்புடி கேட்டுடீங்க 100 தடவைக்கு மேல பாத்துருக்கேன்
ப. ரா: அப்ப மூடிக்கிட்டு வா....இந்த புது வருசத்துக்கு ஜீ தமிழ் channel-la போடுவானுங்க
செந்தில்: சரிண்ணே அப்ப இருந்து 6 மணி ஆட்டம் ‘ஆரம்பம்’ பாத்துட்டு போலாம்
ப. ரா: ( கௌண்டர் அப்படியே தலைல இடி விழுந்த மாதிரி கைய வச்சிக்கிட்டு உக்கறார் அப்பா ஒரு 50 வயசு அம்மா கிராஸ் பண்ணி போறாங்க )
50 வயசு அம்மா: ஏம்ப்பா ராமசாமி...பச்சை ஒடம்பு காரிய கூட்டிட்டு வந்துருக்க..இருந்து 6 மணி ஆட்டம் பாத்துடே போலாம்ல
ப. ரா: வாங்கடி...உனக்கு இதே வேலையா போச்சு...இப்படித்தான் போனதாட்டி சொன்ன...நானும் 6 மணி ஆட்டம் பாத்துட்டே போனேன்...2 wheelarநு நெனைச்சு லாரில அடிபட்டு சாக பாத்தேன்...கண்ட கண்ட நாயெல்லாம் என்ன பாத்து பொறம்போக்கு, வீட்ல சொல்லிட்டு வந்த்யின்னான் ...இது கட்டிட்டு வந்ததா சந்தைய இருந்து ஓட்டிட்டு வந்ததான்னு கேட்டான்
ஒரு கோடி குடுத்தாலும் நான் 6 மணிக்கு மேல எந்த வேலையும் செய்ய மாட்டேன்…(பொண்டாட்டிய பாத்து) ஏய் வாடி
டேய் கரி சட்டி மண்டையா வாடா வீட்டுக்கு (உனக்கு வசிருக்கண்டி இன்னைக்கு கச்சேரி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment